மோட்டார் சைக்கிளில் சென்றவர் பஸ் மோதி சாவு
மண்டபம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் பஸ் மோதி பலியானார்.;
பனைக்குளம்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் பாண்டியராஜன். இவர் மண்டபத்தில் இருந்து தங்கச்சிமடம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ராமேசுவரத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா பஸ், இவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மண்டபம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.