பொன்னானியில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

பொன்னானியில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை;

Update:2023-08-24 00:30 IST

பந்தலூர்

பந்தலூர் அருகே பொன்னானி, அம்பலபாடி, அம்மன்காவு, பந்தப்பிளா, குன்றில்கடவு, மாங்கம்வயல் உள்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அவசர தேவைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் மற்றும் ஆஸ்பத்திரி செல்வதற்கும் பொன்னானி வந்துதான் செல்லவேண்டும். இவ்வாறு சென்றுவரும் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் பஸ்களுக்காக பொன்னானி பயணிகள் நிழற்குடையில்தான் காத்து இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது அந்த நிழற்குடை மிகவும் பழுதடைந்து ஆபத்தான முறையில் காணப்படுகிறது. மேலும், நிழற்குடையின் மேற்கூரையும் சுற்றுச்சுவரும் வெடித்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மழைபெய்யும்போது மேற்கூரையிலிருந்து மழைநீரும் கசிகிறது. மழைநீர் கசிவதால் பொதுமக்களும், மாணவ -மாணவிகளும் பயணிகள் நிழற்குடையில் நிற்கும் போது அவதிப்பட்டு அச்சத்தில் உள்ளார்கள். இதேபோல் நிழற்குடையின் தரைதளமும் பெயர்ந்து உடைந்து மிகவும் மோசமான நிலையில் கிடக்கிறது. அதனால் பழுதான நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்