சாலையோரம் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு பிடிபட்டது

வெள்ளமடம் அருகே சாலையோரம் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு பிடிபட்டது;

Update:2022-10-19 00:15 IST

ஆரல்வாய்மொழி, 

வெள்ளமடம் அருகே உள்ள லாயம் விலக்கு பகுதியில் சாலையோரம் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நாகர்கோவில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்பேரில் வன ஊழியர் துரைராஜ், வேட்டை தடுப்பு காவலர் சிவா ஆகியோர் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 6 அடி நீளம் உடையது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்