தென்காசியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.;
கோப்புப்படம்
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிசம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (19-ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login-ல் தங்களது சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Employer Login-ல் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் TENKASI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளலாம்
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தென்காசி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு தென்காசி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.