அங்கன்வாடி மைய வளாகத்தில் புகுந்த பாம்பு பூதப்பாண்டியில் பரபரப்பு
பூதப்பாண்டியில் அங்கன்வாடி மைய வளாகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டியில் அங்கன்வாடி மைய வளாகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூதப்பாண்டி மேல ரத வீதி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்துக்கு 15 குழந்தைகள் வருகிறார்கள். நேற்று காலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்ட போது, வளாகத்தில் ஒரு பாம்பு புகுந்து, படம் எடுத்து கொண்டிருந்தது. அதன் சத்தத்தை கேட்ட அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் பொதுமக்களும் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் பாம்பு ஓடி விட்டது. அதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தேடியும் பாம்பு எங்கே சென்றது என்று தெரியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.