சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம் கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள பள்ளியில் 12 ஜோடி மாணவ மாணவிகள் இரட்டையர்களாக கல்வி பயின்று வருகின்றனர்.;

Update:2025-12-20 04:06 IST

சாத்தான்குளத்தில் உள்ள டி.என்.டி.டி.ஏ.ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில், தூத்துக்குடி மாவட்டத்திலேயே அதிகமான இரட்டையர்கள், 12 ஜோடி மாணவ மாணவிகள் இரட்டையர்களாக, அதில் 7 ஜோடி சகோதரர்களும், 3 ஜோடி சகோதரிகளும், 2 ஜோடி சகோதர சகோதரிகளுமாக கல்வி பயின்று வருகிறார்கள்.

அவர்களை தலைமையாசிரியர் செல்லப்பாண்டியன் இரட்டையர்கள் தினம், மற்றும் இரட்டையர்கள் உருவாகும் விதம் போன்றவற்றை எடுத்துரைத்து வரும் காலங்களில் இரட்டையர்களாக அரசு வேலைகளில் பிரகாசிக்க வேண்டும் என இரட்டையர்களுக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர்கள் விஜயராணி, வளர்மதி ராஜபாய் மற்றும் அறிவியல் ஆசிரியர் லயன் டேனியல், ஆசிரியர்கள் அக்னஸ், ஜாய்ஸ்பாப்பா, ஸ்டீபன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இரட்டையர்களை வாழ்த்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்