கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 141 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.;
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் கடந்த 18.11.2025 அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான முள்ளக்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மாமுனீஸ்வரன் (வயது 21) என்ற வாலிபரை, மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (19.12.2025) முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 141 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.