வீட்டு சமையலறைக்குள் புகுந்த பாம்பு : உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
வீட்டு சமையலறைக்குள் புகுந்த பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை கார்னேஷன் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி, நேற்று காலை வழக்கம் போல் சமையல் செய்வதற்காக சமையலறைக்குள் சென்றார். அப்போது, அங்கு ஒருவித சத்தம் கேட்டது.
சுற்றிப்பார்த்த போது, சமையல் அறைக்குள் இருக்கும் ஜன்னல்கம்பியில் ஒரு பாம்பு இருந்தது. அதை பார்த்ததும், அவர் கூச்சலிட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்துவிட்டார்.
இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்து, அந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர். பிடிப்பட்ட அந்த பாம்பு, மஞ்சள் சாரை பாம்பு வகையை சேர்ந்ததாகும். சுமார் 5½ அடி நீளம் கொண்டதாகவும் இருந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.