ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய மாணவி

மரம் நடுவதின் அவசியத்தை வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு பள்ளி மாணவி மரக்கன்றுகளை வழங்கினார்.

Update: 2023-07-29 18:45 GMT

கழுகுமலை:

சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் மரம் நடுவோம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவி ரவீணா, ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகர் ராஜகோபால் தலைமை தாங்கினார். கழுகாசலமூர்த்தி கோவில் தலைமை எழுத்தர் மாடசாமி முன்னிலை வகித்தார். ராமராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி தாசில்தார் லெனின் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கழுகாசலமூர்த்தி கோவில் மேலவாசல் முன்பகுதியில் இருந்து புறப்பட்டு சுமார் 2 கி.மீ தூரம் வரை மாணவி ஸ்கேட்டிங் செய்து கொண்டே பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராஜ்மோகன், கிராம நிர்வாக அலுவலர் அந்தோணிசெல்வி, தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் (போக்குவரத்து) மலையாண்டி, கழுகுமலை திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், செயலாளர் முருகன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். நடராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாணவியின் பெற்றோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்