கோவை: அசாமில் இருந்து ரெயிலில் கடத்திவரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
அசாம், கன்னியாகுமரி இடையே விவேக் அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று அசாமில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றுகொண்டிருந்தது. ரெயில் கோவை வந்தபோது அதில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியிலொ கேட்பாரற்று கிடந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். அந்த பைகளில் 44 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து 44 கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் அதை மதுவிலக்கு அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தது யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.