உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-05-18 00:30 IST

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் மாம்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் அரவிந்தன்(வயது 22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அரவிந்தனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்