இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 05.01.2026.
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஓட்டகோவில் கிராமத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சோளக்கதிர்களை வைத்து ஒரு Model வீட்டையே கட்டியுள்ள விவசாய தம்பதி.
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.6687 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு . அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
அங்கன்வாடி பணியாளர்களை சுகாதார செவிலியர்களாக நியமிப்பதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற சுகாதார செவிலியர் பணி வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்துக்கு வெளியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நானும் ஐஸ்வர்யா ராயும் திருமணம் செய்துகொள்ளும் முன்பு, எங்கள் திருமணம் எப்போது என்பதை அவர்களாகவே முடிவு செய்தார்கள். திருமணம் முடிந்த பிறகு, எப்போது விவாகரத்து செய்வோம் என்பதையும் அவர்களாகவே முடிவு செய்கிறார்கள். இது முட்டாள்தனமானது.எங்கள் இருவருக்கும் உண்மை நிலை தெரியும் என நடிகர் அபிஷேக்பச்சன் கூறியுள்ளார்.
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு வரும் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அணைக்க இயலாமல் ஓஎன்ஜிசி மற்றும் தீயணைப்பு படையினர் தவித்து வருகின்றனர்.
சேத்துப்பட்டு பணிமனையில் ரெயில் தடம் புரண்டது, தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதற்கு பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த இரு நாட்களில் மட்டும் 4.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில், தற்போது 2வது முறையாக ரூ.640 கூடியுள்ளது. ஒரு சவரன் ரூ.1,02,080க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.12,760க்கு விற்பனை ஆகிறது.
ரூ.800 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி, திட்டத்தைத் தொடங்கி வைத்தார் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி.