கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி சாவு

வாலாஜா அருகே கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார்.;

Update:2023-05-21 22:54 IST

வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெரு புதிய காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் யோகநாதன் (வயது 24). இவர் பூண்டி கிராமத்தின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். அங்கு கிணற்றில் குதித்த போது சேற்றில் சிக்கிக்கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் செனறு யோகநாதனை தேடும் பணியில் ஈடுபட்டு ்அவரை பிணமாக மீட்டனர். வாலாஜா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்