துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சென்னை வருகை
தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.;
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் செய்கிறார். சென்னையில் இன்று காலை தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.இதனைத்தொடர்ந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.
இதன்பிறகு மாலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் பொது வரவேற்பு விழாவிலும், அதனைத்தொடர்ந்து லோக் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி நடத்தும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
பின்னர் நாளை காலை அவர் வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார். அங்கு சக்தி அம்மாவின் 50-வது பொன்விழா ஜெயந்தியில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து பிற்பகலில் சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சித்தர் தின விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இந்த தகவல்களை துணை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.