காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடியில் காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-01 13:23 GMT

தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற மற்றும் நல வாழ்வு சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் மெய்கண்டன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் அரசு தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வழங்க வேண்டும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள காது கேளாதவருக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் தமிழ்நாடு காது கேளாதார் கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும், அனைத்து கல்வி நிறுவனங்களின் அனுபவமிக்க சைகை மொழி ஆசிரியரை நியமிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களின் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோரிக்கையை அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்