திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

வடமதுரை அருகே திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டனர்.;

Update:2023-10-16 03:30 IST

வடமதுரை அருகே செங்குறிச்சி எஸ்.வலசு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 24). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி ராமாயி (21). இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த ராமாயி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ராமாயியின் உறவினர் மூக்காயி, வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ராமாயிக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்