நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல்தலைமறைவாக இருந்தவர் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-04-14 03:27 IST

களக்காடு:

களக்காடு போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கிய வழக்கில் மலையடி சிங்கிகுளம், தச்சன்குளத்தை சேர்ந்த சுடலை (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்ததார்.

இந்த நிலையில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நாங்குநேரி மாதிஸ்திரேட்டு பிடிவாரண்டு பிறப்பித்தார். இதையடுத்து களக்காடு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த சுடலையை கைது செய்து நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்