ராமநாதபுரம்: 2 கார்கள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 5 பேர் பலி
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே நேற்று இரவு 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. இரு கார்களிலும் மொத்தம் 12 பேர் பயணித்தனர்.
கீழக்கரை அருகே சென்றபோது சாலையில் இரு கார்களுக்கு நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.