கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

களக்காடு அருகே கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-12-16 00:27 IST

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலப்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 39). இவர் கடந்த 2015-ம் ஆண்டில் விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த மூன்று மாதமாக தலைமறைவானார். இதைத்தொடர்ந்து கோர்ட்டு விசாரணைக்கு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து நெல்லை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவுப்படி போலீசார், ஆனந்தராஜை கைது செய்து நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்