இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி திருமண புரோக்கர் பலி

இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி திருமண புரோக்கர் பலி;

Update:2022-11-14 00:15 IST

பாப்பாரப்பட்டி:

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஷா (வயது 58). திருமண புரோக்கர். இவர் வேலை நிமித்தமாக நேற்று முன்தினம் இண்டூர் அருகே உள்ள அதகப்பாடி கிராமத்திற்கு வந்தார். பின்னர் அவர் தர்மபுரி- இண்டூர் சாலையை நடந்து கடக்க முயன்றார்.

அப்போது பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பாஷா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாஷா நேற்று காலை இறந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்