ஆதித்தனார் கல்லூரியில்உலக ஆசிரியர் தின விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உலக ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-10-08 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில், உலக ஆசிரியர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறையில் பணிநிறைவு பெற்ற முன்னாள் பேராசிரியர்கள் அலெக்சாண்டர் கனகராஜ், கமல்ராஜ், செல்லத்துரை, பிரபாகரன், முத்துகுமார் ஆகியோருக்கு தற்போதைய பேராசிரியர்கள் நினைவு பரிசு வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கவுரவித்தனர்.

முன்னாள் பேராசிரியர்கள் தங்களது அனுபவங்களையும், ஆசிரியர்-மாணவர்களின் உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் துறையின் வளர்ச்சி குறித்தும் தற்போதைய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

-----

Tags:    

மேலும் செய்திகள்