அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
ஆண்டிப்பட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டியில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.;
ஆண்டிப்பட்டி ஒன்றியம் கன்னியப்பபிள்ளைபட்டியில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. ஆண்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.லோகிராஜன் தலைமை தாங்கினார். ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.என். வரதராஜன், ஆண்டிப்பட்டி நகரச் செயலாளர் அருண்மதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே ஜக்கையன், முன்னாள் எம்.பி. பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் மண்டபம் மைதீன் கலந்து கொண்டு கட்சியின் வரலாறு, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.