அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-12-14 00:15 IST

சங்கரன்கோவில்:

சொத்துவரி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சுப்பையா பாண்டியன், வேல்முருகன், வாசுதேவன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல இணைச் செயலாளர் சிவானந்த், டாக்டர் திலீபன். மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், தலைமைக்கழக பேச்சாளர் ராமசுப்பிரமணியன், மோகன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், அண்ணாமலை புஷ்பம், ராஜேஸ்வரி கந்தன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மாரியப்பன், நகர பாசறை செயலாளர் நிவாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செந்தில்குமார், ராஜ்குமார், முருகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர், முடிவில் நகர பேரவை செயலாளர் சவுந்தர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்