முதல்-அமைச்சர் கோப்பை ஆக்கி போட்டி: அழகப்பா பள்ளி மாணவர்கள் சாதனை

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் நடைபெற்றன. போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-02-22 18:45 GMT

காரைக்குடி

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டிகள் நடைபெற்றன. போட்டியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 2-ம் இடத்தை பெற்று ரூ.36 ஆயிரம் ரொக்க பரிசு பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பள்ளி குழு தலைவர் ரவி, பள்ளி கல்லூரி செயலாளரும் அழகப்பா, பதிவாளர் ராஜமோகன், பள்ளி தலைமையாசிரியர் ராஜபாண்டியன், உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், உடற்கல்வி இயக்குனர் ஆக்கி பயிற்சியாளர் முத்துக் கண்ணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்