விபத்தில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு உதவி

விபத்தில் தந்தையை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.;

Update:2023-06-20 00:09 IST


கடந்த ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்தில் தந்தையை இழந்த 2 மகன்கள் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.75 ஆயிரம் வீதம் இருவருக்கும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கான ஒப்பளிப்பு ஆணையை கரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மணிவண்ணன், அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார் ஆகியோரிடம் வழங்கினார். அந்த ஆணையை சம்பந்தப்பட்ட தந்தையை இழந்த மாணவர்களின் தாயிடம் வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார் ஆகியோர் வழங்கினர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்