வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு குளிர்சாதன எந்திரம்

வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு குளிர்சாதன எந்திரம் வழங்கப்பட்டது.;

Update:2023-05-26 01:48 IST

இட்டமொழி:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேற்று தனது பிறந்தநாளையொட்டி, பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி பெருமாள் கோவில் கருவறைக்கு தனது சொந்தசெலவில் குளிர்சாதன எந்திரம் வாங்கி கொடுத்தார். பின்னர் கேக்வெட்டி, அன்னதானம் வழங்கி கட்சி நிர்வாகிகளுடனும், பொதுமக்களுடனும் கொண்டாடினார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் சீனிவாசன், துணை தலைவர் கண்ணன், ஆனந்தி சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து திருக்குறுங்குடி வடுகச்சிமதில் கிராமத்தில் குறைந்த மின்அழுத்த குறைபாட்டை சரிசெய்யும் பொருட்டு புதிய மின்மாற்றியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இயக்கி தொடங்கி வைத்தார். ஏர்வாடி உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் (பொறுப்பு), திருக்குறுங்குடி உதவி பொறியாளர் சுடலைமுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், வட்டாரத் தலைவர் அலெக்ஸ், கோவிலம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்