அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி, சூரிபாளையத்தில் அக்னி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.;

Update:2023-07-07 17:50 IST

அக்னிமாரியம்மன் கோவில்

திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே சூரிபாளையத்தில் அன்னை அக்னிமாரியம்மன் சாஷ்திர சம்பரதாயப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று காலை 6 மணிக்கு, செல்வசக்தி விநாயகர், ராஜகணபதி, அக்னிமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 5-ந்தேதி காலை 6 மணிக்கு, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், முதற்கால யாகபூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு, சேவூர் செம்பி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் கேரளா செண்டை மேளத்துடன் பக்தர்கள் எடுத்து வந்தனர். 6 -ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை.

இரவு 7 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை, நாடி சந்தானம், கலசம் புறப்பாடும், காலை 5 மணிக்கு, அக்னி மாரியம்மன், செல்வ சக்தி விநாயகர், ராஜகணபதி கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு, செல்வ சக்தி விநாயகர், ராஜகணபதி, அக்னி மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது.காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை விழா குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்