அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் நிலுவையில் உள்ள அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் தரேஷ் அகமது உத்தரவிட்டார்

Update: 2022-12-02 18:45 GMT

கள்ளக்குறிச்சி

ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் தரேஷ் அகமது தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சமத்துவபுரம், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மறு சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகள் மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் 15-வது மானியக்குழு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் தற்போதைய நிலை மற்றும் முடிவுற்ற பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

பின்னர் அவர் கிராமப்புற வளர்ச்சிக்கு நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நிலையான மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, செயற்பொறியாளர் செல்வக்குமார், உதவி திட்ட அலுவலர்கள், நிலையான மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்