பேரிகையில்விநாயகர் சிலை ஊர்வலத்தில் முஸ்லிம்கள் அன்னதானம்

பேரிகையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கினர்.;

Update:2023-09-22 01:00 IST

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகையில் நேற்று விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து சகோதரர்களாக இருப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் முஸ்லிம்கள் உணவு தயார் செய்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்துக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த வழக்கத்தை மூஸ்லிம்கள் ஆண்டுதோறும் கடைபிடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று ஏரியில் கரைக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்