ஆமருவி பெருமாள் கோவில் தீர்த்தவாரி
தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவில் தீர்த்தவாரி நடந்தது.;
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் ஆமருவி பெருமாள் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்லக்கில் எழுந்தருளி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பெருமாள் காவிரி கரையில் இருந்து இரவு கோவிலுக்கு சென்றடைந்தார்