அம்பேத்கர், பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் அம்பேத்கர், பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2023-01-09 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அம்பேத்கர்- பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஜெய் பீம் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் செண்பகராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பீமாராவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்.) நகர பொறுப்பாளர் சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சாதி மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கழித்த சமூக விரோதிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கயத்தாறு அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் பட்டியல்இன மாணவனை பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கலைந்து ெசன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்