மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியது
அருப்புக்கோட்டை அருகே மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியது;
அருப்புக்கோட்டை,
திருச்சுழியில் இருந்து மருத்துவ பணிக்காக 108 ஆம்புலன்ஸ் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனை ஜோகில்பட்டியை சேர்ந்த நாராயணசாமி (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் புலியூரான் கிராமத்தை சேர்ந்த டெக்னீசியன் அன்புராஜ் (30) என்பவரும் உடன் சென்றார். அப்போது ஆத்திபட்டி அருகே ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தின் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ் வாகனம் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதில் ஆம்புலன்சில் வந்த 2 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.