வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-26 18:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பந்துவக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அறிவுடைநம்பி (வயது 46), விவசாயி. இவர் மீது கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சகாய அன்பரசு பொய் வழக்கு போட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு, ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும், இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அறிவுடைநம்பி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசுக்கு கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக சகாய அன்பரசு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்