மருதையான் கோவில் பகுதியில் சுற்றித்திரிந்த முதியவர் சாவு

மருதையான் கோவில் பகுதியில் சுற்றித்திரிந்த முதியவர் உயிரிழந்தார்.;

Update:2022-11-10 00:11 IST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மருதையான் கோவில் பகுதியில் ராமலிங்கம் (வயது 80) என்ற முதியவர் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் மருதையான் கோவில் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில் முதியவர் மருதையான் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் மயங்கி கிடந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேலமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முத்தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்