உழவர் உற்பத்தியாளருக்கான ஆண்டு பொதுக்குழு கூட்டம்

புதுப்பட்டில் உழவர் உற்பத்தியாளருக்கான ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-09-19 00:15 IST

மூங்கில்துறைப்பட்டு

முஸ்கந்தா உழவர் உற்பத்தியாளருக்கான ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டில் நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் வேளாண்மை இணை இயக்குனர் ஷியாம்சுந்தர் தலைமை தாங்கினார். சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார், புதுப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தாஸ், ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துணை இயக்குனர் சத்தியமூர்த்தி வரவேற்றார். இதில் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை விற்பனைத்துறை சார்பில் விவசாயிகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும், இதன் மூலம் விவசாயிகள் எவ்வாறு பயன் பெறுவது என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் ஈவுத்தொகையான ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்தை உழவர் உற்பத்தியாளர் குழுவினர் அதிகாரிகளிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், வேளாண்மை அலுவலர் தமிழ்வாணன், வேளாண்மை அலுவலர் ராஜ்குமார், இயக்குனர்கள் சின்னராசு, கருணாநிதி, குமார், ஞானவேல், முருகன், அம்பிகா, ரவி, சத்தியசீலன், மணிகண்டன், லட்சுமி, குளுந்தான், வேளாண்மை அலுவலர் சிவா, உதவி அலுவலர் பரசுராமன், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்