தர்மபுரி கிழக்கு மாவட்டதி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்தடங்கம் சுப்பிரமணியிடம் வாழ்த்து பெற்றனர்

Update:2023-09-09 01:15 IST

தர்மபுரி

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிக்கு தொகுதி, நகர மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தர்மபுரி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக தடங்கம் ரகு, கவின்குமார், காயத்ரி ஆகியோரும், தர்மபுரி நகர ஒருங்கிணைப்பாளர்களாக முருகவேல், தமிழ்ச்செல்வன், ஸ்ரீ நிவேதா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களாக முனியப்பன், ராகுல்பிரசாத், தேன்மொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களுக்கும், பேரூராட்சிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம் தலைமையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கட்சியின் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ரேணுகாதேவி, ஆறுமுகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் உதயசூரியன், ஈஸ்வர், ராஜேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்