தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஆபத்தானது - ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி கருத்து...!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஆபத்தானது என ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார்.;

Update:2022-06-30 12:48 IST

மதுரை,

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

இதுபோல தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் கல்வி அதிகாரிகளின் சொந்த தலையீடு இருக்கும். எனவே தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆபத்தானது என நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்