நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடர்ந்து நிறுத்தம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள புயல் தாக்கத்தால் காங்கேசன் துறைமுகம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.;
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம்- இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கப்பல் சேவை தொடங்குவதாக திட்டமிடப்பட்டது.
தற்போது காலநிலை மாறுபாடுகளின் காரணமாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள புயல் தாக்கத்தால் காங்கேசன்துறைமுகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்கும் பணி நடந்து கொண்டு இருப்பதாலும் கப்பல் சேவை தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.