போக்குவரத்து, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் நியமனம்
வேலூர் சரகத்தில் போக்குவரத்து, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.;
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆயுதப்படையில் பணியாற்றிய 5 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வேலூர் சரகத்துக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தற்போது பணி ஒதுக்கீடு செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி.முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்த ராஜன்பாபு வேலூர் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராகவும், கருணாகரன் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராகவும், கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்த ரமேஷ் திருப்பத்தூர் மாவட்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்த ராஜன் வேலூர் சத்துவாச்சாரி போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும், திருச்சி மாநகர ஆயுதப்படையில் பணியாற்றிய அறிவழகன் வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.