சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.;

Update:2023-05-19 23:57 IST

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 184 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 172 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 93 சதவீதம் ஆகும். பள்ளி அளவில் முதல் பி.சர்வேஸ்வரன் முதல் இடத்தையும், கே.பவனா, எஸ்.கேசவன் ஆகியோர் இரண்டாம் இடத்தையும், வி.பி. ஜெய்ஆகாஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்து பள்ளி அளவில் சாதனை படைத்துள்ளனர். மேலும் 450-க்கு மேல் 5 மாணவர்கள், 400-க்கு மேல் 30 மாணவர்கள், 350-க்கு மேல் 66 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். முதல் வகுப்பில் 110 மாணவர்கள் தேர்த்தி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு பள்ளியின் தலைவர் ஈஸ்வரப்பன், செயலாளர் வக்கீல் சொல் முத்தழகன், பொருளாளர் கவிஞர் மா.ஜோதி பள்ளியின் முதல்வர் மணிசேகரன், நிர்வாக அலுவலர் வேலாந்தன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ -மாணவிகளுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், முதல்வர், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்