தாராபுரம் தென்தாரை பீமராயர் வீதியை சேர்ந்த பாண்டியன் மனைவி விஜயா. இவரின் மகன் தினேஷ் (வயது 29). அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். விஜயா நேற்று பகல் 11 மணிக்கு மகன் தினேஷ் வேலைக்கு சென்றுள்ளாரா? என்று பார்க்க ஓட்டலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தினேஷ் வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் சுற்றி திரிந்த தினேசை பார்த்து வேலைக்கு செல்லாமல் ஏன் இருக்கிறாய் என்று விஜயா கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ் அரிவாளால் விஜயாவை வெட்டினார். இது குறித்து தாராபுரம் போலீசாரு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் விரைந்து வந்து விஜயாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தினேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.