மகேந்திரமங்கலம் அருகேலாரி டிரைவரை தாக்கிய தந்தை, மகன் கைது

Update:2023-09-23 01:00 IST

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள செங்கன்பஸ்வன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 32). லாரி டிரைவர். இவர்களுக்கு சொந்தமாக பன்னிகொட்டாய் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று காலை ராஜீவ் காந்தியின் தந்தை முருகன் (60) டிராக்டரில் உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகனின் அண்ணன் கோவிந்தராஜ் (65), அவருடைய மகன் ஆறுமுகம் (28), கோவிந்தராஜின் மனைவி ஜெயா (47) ஆகியோர் முருகனிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த ராஜீவ்காந்தி அவர்களை தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து உருட்டு கட்டை உள்ளிட்டவற்றால் ராஜீவ்காந்தியை தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெயாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்