தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக மேல்கொட்டாய் சாகுல் சூர்யா (29), சந்தை மேட்டு தெரு விஜய் (40), நவ்ரோஜி தெரு சந்தோஷ் குமார் (42), நடராஜ் (39) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.22,600 பறிமுதல் செய்யப்பட்டது.
அஞ்செட்டி போலீசார் பையில்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த லட்சுமணன் (29), பேடர அள்ளி பாண்டுரங்கன் (40), ஜெய்கிருஷ்ணன் (26), ஷாருக்கான (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.750 பறிமுதல் செய்யப்பட்டது.