லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்.;

Update:2023-06-10 00:15 IST

ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் கோட்டைவாசல் விநாயகர் கோவில் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த முதியவரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக ராமநாதபுரம் வடக்குத்தெரு அங்குராஜா (வயது 53) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்