நல்லம்பள்ளி அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Update:2023-06-16 00:30 IST

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரன்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் மது பதுக்கி விற்பதாக தொப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 31), இந்திரா (59) ஆகியோரது வீடுகளில் மது பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்