கடத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்து மது விற்றவர் கைது

Update:2023-06-11 01:00 IST

மொரப்பூர்

கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளி ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் தானனூர் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 36) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 70 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்