சிறுமியை கடத்தியவருக்கு போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை - வேலூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-12-30 09:12 IST

வேலூர்,

வேலூர் மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்றதாக கடந்த 2024-ம் ஆண்டு போக்கோ சட்டத்தின் கீழ் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக வேலூர் போக்சோ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையில் ஆனந்தகுமார் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதையடுத்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்