சாராயம் வைத்திருந்தவர் கைது
நெமிலி அருகே சாராயம் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;
நெமிலியை அடுத்த சயனபுரம், ஆட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பத்ரகாளி அம்மன் கோவிலின் பின்புறம் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் 10 லிட்டர் சாராயம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் சயனபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 54) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.