ஆறுமுகநேரி பகுதியில் ரூ.7½ லட்சம் காப்பர் ஒயர் திருட்டு

ஆறுமுகநேரி பகுதியில் ரூ.7½ லட்சம் காப்பர் ஒயர் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-09-27 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பகுதியில் ரெயில்வே பணிக்களுக்கான ரூ.7½ லட்சம் தாமிரக்கம்பிகளை மர்மநபர்களை திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தாமிர கம்பிகள்

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரையிலான ெரயில் தடத்தில் மின்சார ெரயில்களை இயக்குவதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பாதிக்கு மேல் பணிகள் முடிந்த நிலையில் தற்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரையிலான மின்சார ெரயிலுக்கான மின்கம்பங்கள் நடப்பட்டு அதில் தாமிரகம்பிகள் (காப்பர் வயர்கள்) பொருத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஆறுமுகநேரி ெரயில் நிலையத்திற்கு மேற்கே உள்ள மூலக்கரை ெரயில்வே கேட் வரையிலான பகுதிகளில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மின்சார காப்பர் வயர்களில் இருந்து சுமார் 1341 மீட்டர் அளவில் ரூ.7½ லட்சம் மதிப்பிலான தாமிரக்கம்பிகளை மர்மநபர்கள் வெட்டி எடுத்து திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக சென்னை தனியார் நிறுவன செக்யூரிட்டி சர்வீஸ் சூப்பர்வைசர் ராஜேந்திரன், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.‌ சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்