70 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.;

Update:2025-12-31 02:20 IST

சென்னை,

தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1. டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

2. சந்தீப் மிட்டல்- 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.

3. பால நாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

4. அன்பு- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

5. பிரேம் ஆனந்த் சின்ஹா- தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். ஆவடி கமிஷனராக பதவியேற்பார்.

6. செந்தில்குமார்- மேற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், பதவி உயர்வு பெற்று, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி. யாக பதவியேற்பார்.

7. அனிஷா உஷேன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

8. சங்கர்- ஆவடி போலீஸ் கமிஷனரான இவர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆனார்.

9. அமல்ராஜ்- அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யான இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கண்ட அதிகாரிகள் உள்பட 70 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்